மட்டக்களப்பு சீலாமுனையில் சட்டவிரோதமாக வடிகான் நிரப்பும் முயற்சி தடுத்து நிறுத்தம்!

Date:

மட்டக்களப்பு சீலாமுனை பகுதியில் சட்ட வீதி முறைகளை மீறி வடிகான் ஒதுக்கு காணியை கிறவல் இட்டு நிரப்புவதனை தடுத்து நிறுத்தினார் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.தயாபரன்.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட வடிகான்களை துப்பரவு செய்யும் பணியானது ஆணையாளரின் தலமையில் பல நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக இன்று சீலாமுனையை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள வடிகான்களை துப்பரவு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தனிநபர் ஒருவர் கனரக வாகனத்தைக் கொண்டு வடிகானுக்குரிய ஒதுக்குக் காணியையும் வடிகானுக்கு குறுக்கேயும் கிரவல் இட்டு நிரப்புவதனை ஆணையாளர் நேரில் அவதானித்ததையடுத்து நிரப்புவதை உடனடியாக நிறுத்துமாறும் உத்தரவிட்டதுடன் நிரப்புவது தொடர்பில் ஆவணங்களை பரிசீலிக்குமாறு சம்பத்தப்பட்ட. அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதற்கமைய குறித்த சம்ப இடத்திற்கு ஆவணங்களை பரிசீலிப்பதற்காக விரைத்த மாநகர உதவி ஆணையாளர் சிவராசா, பொறியியலாளர், மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் ஆவணங்களை பரிசீலனை செய்து உடன் நிறுத்துவதற்கான முடிவினை மேற்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்