தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் பாகம் என்று சந்தேகிக்கப்படும் சுமார் 250 கிலோ எடையுள்ள இரும்பு மிதவை நேற்று (10) மொரகல்ல கரையோரத்தில் ஒதுங்கியுள்ளது.
நேற்று மாலை மீனவர்கள் கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் இந்த இரும்பு மிதவை கடலில் அடித்து வரப்படுவதை அவதானித்தனர். நேற்று காலை மொரகல்ல கரைக்கு அருகில் மிதந்து கொண்டிருந்தது.
அளுத்கம மீன்வள ஆய்வாளரின் மேற்பார்வையில், அப்பகுதியில் வசிப்பவர்களின் உதவியுடன், கயிறு கட்டி கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது.
சுமார் 7 அடி உயரம், கிட்டத்தட்ட 250 கிலோ எடையுள்ள இரும்பு மிதவையை நாரா நிறுவனத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.





