24.1 C
Jaffna
January 6, 2025
Pagetamil
உலகம்

இளம் பெண்ணிற்கு கோடி கணக்கில் நஷ்ட ஈடு கொடுத்த ஆப்பிள்!

கடந்த 2016 ஆப்பிளின் காண்ட்ராக்டர் நிறுவனமான பிகேட்ரான் நிறுவனத்தின் ஊழியர்கள் ரிப்பேருக்கு வந்த செல்போனிலிருந்த பெண்ணின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ததால் அந்த பெண்ணிற்கு ஆப்பிள் நிறுவனம் கோடிகணக்கில் நஷ்ட ஈடு கொடுத்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃப்போர்னியா மாகாணத்தில் வசித்த 21 வயது மாணவி ஒருவர் தனது ஐபோனில் கேளாறு ஏற்பட்டதால் அருகில் உள்ள ஆப்பிள் நிறுவன காண்ட்ராக்டரான பிகேட்ரான்என்ற ஐபோன் சர்வீஸ் செய்யும் நிறுவனத்திடம் கொடுத்துள்ளார். அந்த நேரத்தில் அந்த செல்போனை ரிப்பேர் செய்த சிலர் அந்த செல்போனில் உள்ள அந்த பெண்ணின் அந்தரங்க/நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்துள்ளனர். அதை அவர்கள் அந்த பெண்ணின்
பேஸ்புக் பக்கத்திலேயே பதிவேற்றம் செய்துள்ளனர்.

அதை கேள்விபட்டதும் அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். கிட்டத்தட்ட அந்த பெண்ணின் செல்போனில் உள்ள 10 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை பார்த்தும் அந்த பெண் அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை டெலிட் செய்துள்ளார். ஆனால் அதற்குள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பலராக பார்க்கப்பட்டு பகிரப்பட்டுவிட்டது.

இதையடுத்து அந்த பெண் பிகேட்ரான்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். அதில் தான் ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்றும் தனது தனிப்பட்ட தகவல்களை ஆப்பிள் நிறுவன காண்ட்ராக்டர் பிகேட்ரான்திருடி அதை முறைகேடாக பயன்படுத்தி தன்னை அவமானப்படுத்திவிட்டது. என்று குறிப்பிட்டு அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும், தனக்கு மான நஷ்டமாக 5 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தலையிட்ட ஆப்பிள் நிறுவனம் அந்த பெண்ணிற்கு நஷ்ட ஈடுவழங்க முன் வந்துள்ளது. முன்னதாக பிக்கேட்டான் நிறுவனம் இந்த செயலை செய்த இருவரை பணியிலிருந்து நீக்கியது. தற்போது ஆப்பிள் நிறுவனம் அந்த தொகையை கொடுத்ததால் வழக்கு ரத்தானது. அந்த பெண் 5 மில்லியன் அமெரிக்க டாலர் கேட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம் எவ்வளவு பணம் கொடுத்தது என்ற தகவல்கள் இல்லை.

இது குறித்து ஆப்பிள் நிறுவனம் கூறும் போது : “இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. இப்படி கண்டிப்பாக நடந்திருக்க கூடாது. இதன் பின்பு ஆப்பிள் செல்போன்களை ரிப்பேர் செய்யும் ப்ரோட்டோகால்களை சீர்படுத்தியுள்ளோம். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் நிச்சயம் தடுப்போம்” என கூறியது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகின் மிக வயதான பெண் காலமானார்!

Pagetamil

இறந்த குட்டியின் உடலை சுமந்தபடி சுற்றித்திரியும் திமிங்கிலம்!

Pagetamil

16 முறை விண்வெளியில் புத்தாண்டை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

east tamil

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி

Pagetamil

Leave a Comment