இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 54 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
நேற்று (8) அறிவிக்கப்பட்ட இந்த எண்ணிக்கையே, இதுவரை இலங்கையில் நாளொன்றில் அறிவிக்கப்பட்ட அதிக எண்ணிகையாகும்.
இதுவரை 1,844 மரணங்கள் பதிவாகியுள்ளன.
மே மாதம் 10ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை 15 மரணங்களும், ஜூன் 2ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை 39 மரணங்களும் பதிவாகியுள்ளது.
32 ஆண்களும், 22 பெண்களும் மரணமாகியுள்ளனர்.
கட்டான, உடுவெல, மாவனெல்ல, அரநாயக்க, மாளிகாவத்தை, ஏறாவூர் 2, கடவத்தை,
மொரட்டுவ, ‘அலுபோமுல்ல, வாதுவ, வலஸ்முல்ல, கொலவனிகம, கொழும்பு 15, ஜா-எல, வத்தளை, பங்கம்முல்ல, தலத்துஓயா, பதுளை, கிளிநொச்சி, நிகவரெட்டிய, மரதன்கடவல, மதவாச்சி, அதுருகிரிய, எல்பிட்டிய, கரந்தெனிய, பெரிய நீலாவணை, கந்தளாய், மாத்தளை, ரத்தோட்ட, ‘ஹோரம்பெல்ல, பட்டுகொட, வெயாங்கொட, கண்டி, அக்குரன, உடிஸ்பட்டுவ, லுனுவத்தை, தோரபிட்டி, மஹியங்கன, ராகம, கொழும்பு 13, கந்தான, அவிசாவளை, வாதுபிட்டிவால, பன்னிபிட்டி, வாகா மற்றும் மரவில பகுதிகளை சேர்ந்தவர்களே உயிரிழந்தனர்..




