தெற்கு பாகிஸ்தானில் இன்று திங்கள்கிழமை ரயில் விபத்தில் 30 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் வரையில் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
கராச்சியில் இருந்து சர்கோதாவுக்குச் செல்லும் மில்லட் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு, இன்னொரு ரயில் பாதையில் விழுந்தது. அந்த சமயத்தில் ராவல்பிண்டியிலிருந்து எதிர்திசையில் வந்த சேர் சையத் எக்ஸ்பிரஸ் அதில் மோதி விபத்திற்குள்ளானது.
பாகிஸ்தானில் அடிக்கடி ரயில் விபத்துக்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1