செல்லப்பிராணியாக வளர்க்க நினைத்து ஒன்லைனில் பாம்பை வாங்கிய சீனர்! பின்னர் நடந்த கொடூரம்..

Date:

வடகிழக்கு சீனாவின் ஹெலாங் ஷாங் என்ற பகுதியை சேர்ந்தவர் லியூ. இவர் தன் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்க பாம்பு ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். சீனாவில் பாம்புகளை வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்க அனுமதியுள்ளது.

இப்படியாக செல்லப்பிராணிகளாக பாம்பை ஆர்டர் செய்தவருக்கு பாம்பு வந்தது. பொதுவாக பாம்புகளை செல்லப்பிராணிகளாக வாங்குபவர்கள் அதில் உள்ள விஷ தன்மையை எடுத்துவிட்டு பின்னரே வாங்குவர், இவர் ஒன்லனில் வாங்கிய போது அதன் விஷத்தன்மை எடுக்கப்பட்டவிட்டதா என கேட்டார் அதற்கு அந்த பாம்பை விற்ற நிறுவனமும் முறைப்படி விஷத்தன்மை எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.

பாம்பு வந்த பின்பு ஒரு நாள் பாம்புடன் அவர் பெட்டில் படுத்திருந்த போது எதிர்பாராத விதமாக பாம்பு அவரின் தொடை பகுதியை கடித்து விட்டது. அப்பொழுது அவர் அந்த பாம்பிடம் விஷம் இருந்ததை கண்டுபிடித்துவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சென்று நடந்ததை கூறினார்.

இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சரியான நேரத்தில் மருந்து கொடுத்ததால் அவர் உயிர் தப்பினார். இருந்தாலும் மரணிக்கும் தருவாய்க்கு சென்றே உயிர் திருப்பியுள்ளார். அதன் பின் நடந்த விசாரணையில் அவர் பாம்பை வாங்கிய நிறுவனம் செய்த சிறிய பிழையால் பாம்பு விஷம் நீக்கப்பட்ட பாம்பிற்கு பதிலாக விஷத்தன்மை நீக்கப்படாத பாம்பு மாற்றி அனுப்ப பட்டது தெரியவந்தது.

இளைஞர் பாம்பு வளர்க்கும் ஆசையில் ஒன்லைனில் பாம்பை வாங்கி அதினிடம் கொத்து வாங்கி மரணத்தையே தொட்டுவிட்டு உயிர் திரும்பி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஷம்போ பக்கெட்டுகள்

கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 5,386 ஷாம்போ பக்கெட்டுகள்...

வீரவன்சவின் சகோதரருக்கு விளக்கமறியல்

ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசாங்க வாகனங்களை...

வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைக் குறிவைத்த திருடர்கள் சிக்கினர்

காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்