எமக்கு தொற்று இல்லை; சிகிச்சை நிலையம் செல்ல தொற்றாளர்கள் மறுப்பு: சுன்னாகத்தில் பரபரப்பு!

Date:

சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் சிகிச்சை நிலையத்திற்கு செல்ல முடியாதென கொரோனா தொற்றாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பரபரப்பான நிலைமை தோன்றியுள்ளது.

அந்த பகுதியில் 10 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் தாம் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என மறுப்புத் தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தொற்றாளர்களை அழைத்து செல்ல இன்று காலை நோயாளர் காவு வண்டி சென்றது.

எனினும், தமக்கு நோய்த்தொற்று இல்லை எனவும் பரிசோதனைகளில் நம்பிக்கையில்லை எனவும் தெரிவித்த அவர்கள் நோயாளர் காவு வண்டிகளில் ஏற மறுத்தனர்.

அத்துடன் தம்மை வற்புறுத்தினால் உயிரை மாய்ப்போம் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

இதையடுத்து, அவர்களை சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லும் பொறுப்பு இராணுவத்திற்கு வழங்கப்பட்டது. இந்த செய்தி பிரசுரமான நேரத்தில் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து, தொற்றாளர்களை நோயாளர் காவு வண்டிகளில் ஏற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை

இலங்கை தனது முதல் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான ரோபோ அறுவை சிகிச்சைகளை...

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்