தன்னை சூப்பர் மேனாக கருதியவருக்கு நேர்ந்த விபரீதம்! (vedio)

Date:

சூப்பர் மேன் வேடமிட்டு நடு ரோட்டில் நின்றவர் மீது பஸ் மோதிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது போல நீங்கள் யாரும் முயற்சி செய்யாதீர்கள்

உலகில் சூப்பர் ஹீரோக்களுக்கு பஞ்சமே கிடையாது. ஹாலிவுட் முதல் கிராமம் வரை சூப்பர் ஹீரோக்களளுக்கான ரசிகர்கள் இருக்கத்தான் செய்தார்கள். ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் சக்திமான் சூப்பர் ஹீரோவாக பார்க்கப்பட்டார். அதன் பின் சூப்பர் மேன்,ஸ்பைடர் மேன், பேட்மேன், என ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் அதிகம் வர துவங்கிவிட்டன. இன்றும் சூப்பர் ஹீரோக்களின் படங்கள் வந்தால் அதற்கான ரசிகர்கள் பட்டாளம் மிகப்பெரியதாக இருக்கும்.

இப்படியாக சூப்பர் ஹீரோக்களின் மீது உள்ள மோகத்தில் சிலர் அவர்களை போல செய்ய வேண்டும் என முட்டாள் தனமாக செய்வார்கள் குறிப்பாக மொட்டை மாடியிலிருந்து குதித்தால் சக்திமான் வந்து காப்பாற்றுவார் என நம்மூரில் சிலர் மொட்டை மாடியலிருந்து குதித்தது பற்றி எல்லாம் நாம் கேள்விபட்டிருப்போம்.

இப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் பிரேசிலில் நடந்துள்ளது. பிரேசிலில் பாராடோஸ் கோக்யூரியஸ் என்ற பகுதியை சேர்ந்த லூஸ் ரீபைரியோ டி ஆண்டராடே என்ற பவர் சூப்பர் மேன் போல வேடமிட்டு நடந்து வரும் வாகனத்தை நிறுத்த முயற்சித்துள்ளார்.

அதை செய்யும் போது அவர் சூப்பர் மேன் உடையணிந்து ஒரே கேமராவில் நடப்பவற்றை பதிவு செய்து கொண்டே இதைசெய்துள்ளார். இவர் நடுரோட்டிற்கு சென்று அங்கு வரும் பஸ் ஒன்றை நிறுத்த முயற்சி செய்தார். இதை கண்டதும் பஸ் டிரைவர் பஸ்ஸை நிறுத்த முயற்சி செய்துள்ளார். பஸ் வேகம் குறைந்தாலும் அவர் மீது மோதுவதை தடுக்க முடியாவில்லை. இறுதியாக பஸ் இவர் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக இவருக்கு எந்த விதமான சேதாரமும் ஏற்படவில்லை.

https://youtu.be/dkyGiRbeORo?t=5

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்