நேபாளத்தில் பரவும் கருப்பு பூஞ்சை; முதல் நோயாளி உயிர்பலி!

Date:

நேபாளத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா நெருக்கடிக்கே இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில்
கருப்பு பூஞ்சை நோய் பரவல் மற்றொரு தலைவலியாக இருக்கிறது. தமிழகம் உள்பட பல்வேறு இந்திய மாநிலங்களில் கருப்பு பூஞ்சை பரவி வருகிறது. வெளிநாடுகளிலும் கருப்பு பூஞ்சை கைவரிசையை காட்டியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்துள்ள நிலையில், முதல்முறையாக ஒரு நபர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் இதுவரை குறைந்தது பத்து பேருக்காவது கருப்பு பூஞ்சை தொற்று இருப்பதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அந்த நபருக்கு 65 வயது. அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரின் சளி மாதிரி பரிசோதிக்கப்பட்டபோது கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் தெரிய்வந்துள்ளது.

இதற்கு முன் மிக அரிதான நோயான கருப்பு பூஞ்சை தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நோய் மூளையை தாக்கி உயிரிழக்கச் செய்கிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் விகிதம் 50%. இந்நோயின் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளும் அரிது என்பது கூடுதல் சுமை.

spot_imgspot_img

More like this
Related

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்