நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் (குறிப்பாக மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில்) மற்றும் வடமேற்கு மாகாணங்களில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று 3ஆம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் இன்று 4ஆம் திகதி அதிகாலை 1.30 மணி வரையான காலப்பகுதியில் இரத்தினபுரி எஹெலியகொட பகுதியில் 247 மி.மி மழைவீழ்ச்சி பதிவாகிள்ளது.





