இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளை, இங்கிலாந்து தனது சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
இலங்கை, ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கோஸ்டாரிகா, எகிப்து, சூடான் மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகியவற்றை உள்ளடக்கிய சிவப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இடங்களிலிருந்து இங்கிலாந்திற்கு வரும் மக்கள் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் 10 நாட்களுக்கு- வயது வந்தவருக்கு 1,750 பவுண்ஸ் என்ற செலவு அடிப்படையில் தங்க வேண்டும்.
கடினமான பயண விதிகளுடன் ஏழு நாடுகளும் சிவப்பு பட்டியலில் சேரும்.
போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் இந்த நடவடிக்கை ஒரு “பாதுகாப்பு-முதல் அணுகுமுறை “ என்றார்.
இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்கு வருபவர்கள் கட்டாய ஹோட்டல் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ள வேண்டும். ஜூன் 8 அன்று 0300 GMT முதல் நடைமுறைக்கு வரும்.




