சீனா உதவியுடன் பாகிஸ்தான் தயாரித்த கொரோனா தடுப்பூசி: ‘பாக்வேக்’ மருந்து விநியோகம் தொடக்கம்!

Date:

சீனா வழங்கிய மூலப்பொருட்களின் உதவியோடு பாகிஸ்தான் உருவாக்கியுள்ள ‘பாக்வேக்’ கொரோனா தடுப்பூசியின் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்தி வந்த பாகிஸ்தான் முதல் முறையாக உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கி உள்ளது.

சீன அரசுக்கு சொந்தமான கான்சினோ நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் மூலப்பொருட்கள் செறிவூட்டப்பட்டு மிக அடர்த்தியான நிலையில் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்தில் இவை பிரித்தெடுக்கப்பட்டு தடுப்பூசிகளாக தயாரிக்கப்பட்டன.

இதன் பின்னர் நடந்த ஆய்வக சோதனைகளுக்குப் பின், 18 ஆயிரம் பேரிடம் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதில், இதன் செயல்திறன் 74.8 சதவீதமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ‘பாக்வேக்’ எனப் பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசியின் விநியோகம் பாகிஸ்தானில் தொடங்கியுள்ளது.

அடுத்த சில நாட்களில் பாகிஸ்தானில் ‘பாக்வேக்’ தடுப்பூசி தயாரிப்பு பெரிய அளவில் தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் பிரதமரின் சுகாதாரத்துறை ஆலோசகர் டாக்டர்.பைசல் சுல்தான் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை சீனா வழங்கியிருந்தாலும், அதனை மேம்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பது மிகவும் சவாலான பணி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

விபத்தில் இளம்பெண் பலி

நுவரெலியாவுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றுடன்...

சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்க- சுரேஷ் க. பிரேமச்சந்திரன் வேண்டுகோள்

மன்னிப்பையும் சகிப்புத் தன்மையையுமே அனைத்து மதங்களும் போதிக்கின்றன. மதங்களின் உண்மையான கோட்பாட்டை...

நாயை உதைத்தவனிற்கு மன்னிப்பை பற்றி யாரும் பேசவில்லை- உலாமா தலைவர்

சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள நற்பிட்டிமுனை இளைஞர் சிவராசா அனோஜனுக்கு மரண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்