தனி பிரிவு கேட்கும் வலைப்பாடு மக்கள்!

Date:

தனியான கிராம சேவையாளர் பிரிவை உருவாக்கி தாருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனிடம் வலைப்பாடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலைப்பாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு இணைதலைவருமான அங்கயன் இராமநாதனிடம் அவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

மக்கள் தொகை இல்லாத கிராமமான பொன்னாவெளி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வலைப்பாடு கிராமத்தில் 400 குடும்பங்கள் உள்ளன.

இந்த கிராமத்தை தனியான கிராம சேவையாளர் பிரிவாக மாற்றி தருமாறு குறித்த கலந்துரையாடலில் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது, வலைப்பாடு பங்கு தந்தை, மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

எல்லை நிர்ணய குழுவிடம் குறித்த விடயம் முன்வைக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என இதன் போது மக்களிடம் அங்கயன் இராமநாதன் குறிப்பிட்டிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழி விவகாரம்: ராஜ் சோமதேவவின் விளக்கங்கள் குறித்து சுயாதீன ஆய்வு கோரும் அமெரிக்கத் தமிழர் அமைப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்துள்ள...

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து நவம்பர் 10 திகதி வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்