நவோமி ஒசாகா பிரெஞ்ச் ஓபனிலிருந்து விலகல்!

Date:

பத்திரிகையாளர் சந்திப்பை புறக்கணித்த விவகாரம் தொடர்பாக பிரபல டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா, பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் வன் வீராங்கனையுமான ஜப்பானின் நவோமி ஒசாகா 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ருமேனியா வீராங்கனை பாட்ரிசியா மரியா டிக்கை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த போட்டிக்கு பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நவோமி ஒசாகா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதனை அடுத்து போட்டி அமைப்பு குழுவின் விதிமுறையை மதிக்காமல் நடந்து கொண்ட நவோமி ஒசாகாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக பிரெஞ்ச் ஓபன் போட்டி அதிகாரி அறிவித்துள்ளார். மீடியாக்களை சந்திக்கும் தனது கடமையை ஒசாகா தொடர்ந்து தவிர்த்தால் போட்டியில் இருந்து நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரெஞ்ச் ஓபன் சமூக வலைதளத்தில் ஒசாகாவின் தவறை சுட்டிக்காட்டும் விதத்தில் ரபெல் நடால், நிஷிகோரி, சபலென்கா, கோகோ காப் ஆகியோர் மீடியாவை சந்திக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அவர்கள் தங்கள் பணியை புரிந்து செயல்படுகிறார்கள் என்று பதிவிடப்பட்டு இருந்தது. இதற்கு முன்னாள் வீராங்கனைகள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து அந்த பதிவு உடனடியாக நீக்கப்பட்டது.

இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பை புறக்கணித்த விவகாரம் தொடர்பாக நவோமி ஒசாகா, பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களுக்கு நான் கவனச்சிதறலாக இருந்து விடக்கூடாது என்பதற்காக போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். உண்மை என்னவென்றால், 2018 ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன் போட்டியில் இருந்து நான் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன், சமாளிக்க எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. என்னை அறிந்த எல்லோருக்கும் நான் திடமான சிந்தனை உடையவர் என்பது தெரியும்” என்று நவோமி ஒசாகா பதிவிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்