நேற்று 2,912 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 186,364 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 2,882 பேர் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 30 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது 3,140 பேர் நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, COVID-19 இலிருந்து மீண்ட 1,915 நபர்கள் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 151,740 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 1,667 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.




