டார்சான் பட நடிகர் விமான விபத்தில் மரணம்! – ஹாலிவுட்டில் அதிர்ச்சி..

Date:

டார்சன் பட நடிகர் ஜோ லாரா விமான விபத்தில் உயிரந்துள்ளது ஹாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 58.

செஸ்னா 501 எனப்படும் தனியார் ஜெட் கடந்த சனிக்கிழமை நாஷ்வில்லிக்கு வெளியே உள்ள ஸ்மிர்னா என்ற விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, பாம் பீச் நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் பெர்சி பிரீஸ்ட் ஏரியில் விமானம் விழுந்து மூழ்கியது.

அதை அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இரவு முழுவதும் சோதனை நடத்திய பிறகு விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.

இந்த விபத்தில் மொத்தம் ஏழு பேர் இருந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதில் நடிகர் ஜோ லாராவும் அவரது மனைவியும் அடங்குவர். அவர்களது மறைவு ஹாலிவுட் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாரா மற்றும் க்வென் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

நடிகர் ஜோ லாரா 1996 மற்றும் 2000-ம் ஆண்டுகளுக்கு இடையில் மொத்தம் 22 எபிசோடுகளில் டார்சானாக நடித்துள்ளார். ஸ்டீல் ஃபிரண்டியர், சன்செட் ஹீட், கன்ஸ்மோக்: தி லாஸ்ட் அப்பாச்சி, அமெரிக்கன் சைபோர்க்: ஸ்டீல் வாரியர், தி மாக்னிஃபிசென்ட் செவன், பேவாட்ச் உள்ளிட்ட பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பலே திருடனை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிசார்

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டு...

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்