காதலி நடிகையின் வீட்டிற்கு அருகே ரூ.20 கோடிக்கு வீடு வாங்கிய வாரிசு நடிகர்!

Date:

தன் காதலியான நடிகை மலாய்கா அரோராவின் வீட்டிற்கு அருகே ரூ. 20 கோடிக்கு சொகுசு வீடு வாங்கியிருக்கிறார் பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர். அவர் வீடு வாங்கியிருக்கும் பகுதியில் பல பிரபலங்கள் வசித்து வருகிறார்கள்.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த தாரத்து மகனான அர்ஜுன் கபூர் நடிகராகிவிட்டார். அவரின் முதல் படம் வெளியானபோது அம்மா மோனா உயிருடன் இல்லை. அதை நினைத்து இன்று வரை வருத்தப்படுகிறார் அர்ஜுன் கபூர்.

அர்ஜுன் நடிக்க வந்து 9 ஆண்டுகளாகிவிட்டது. அவர் தன்னை விட வயதில் பெரியவரான நடிகை மலாய்கா அரோராவை காதலித்து வருகிறார். மலாய்காவுக்கு முதல் திருமணம் மூலம் 18 வயது மகன் இருக்கிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானை தான் காதலித்து திருமணம் செய்தார் மலாய்கா.

திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து கணவரை பிரிந்தார் மலாய்கா. விவாகரத்திற்கு பிறகு அவரும், அர்ஜுன் கபூரும் காதலிக்கிறார்கள். இந்த காதலுக்கு போனி கபூர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

காதல் விஷயத்தில் மட்டும் தந்தையின் பேச்சை கேட்பதாக இல்லையாம் அர்ஜுன். இந்நிலையில் மும்பை பந்த்ரா பகுதியில் ரூ. 20 கோடிக்கு வீடு வாங்கியிருக்கிறார் அர்ஜுன். 4 படுக்கையறைகள் கொண்ட அந்த வில்லா மலாய்கா அரோராவின் வீட்டிற்கு அருகில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காதலிக்கு அருகில் இருக்க வசதியாக அர்ஜுன் புது வீடு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா கூட அர்ஜுன் வீடு வாங்கியிருக்கும் அதே இடத்தில் வீடு வாங்கியதாக முன்பு செய்திகள் வெளியாகின.

அர்ஜுனுக்கு தன் அப்பா, நடிகை ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டதில் கோபம் இருந்தது. தன் அம்மாவுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று போனி கபூர் மீது கோபம். அர்ஜுன் தன்னை வெறுப்பதை நினைத்து கடைசி வரை பயத்தில் இருந்தார் ஸ்ரீதேவி. ஆனால் ஸ்ரீதேவி இறந்த பிறகு அவரின் மகள்கள் ஜான்வி, குஷியை தன் சொந்த தங்கைகள் போன்று பார்த்துக் கொள்கிறார் அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இமாம் கஸ்ஸாலி வித்தியாலய மாணவர்களுக்கு அமீர் மேர்சா பொது நூலகத்தின் இலவச அங்கத்துவம் வழங்கி வைப்பு

நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலய மாணவர்களுக்கு நிந்தவூர் அமீர் மேர்சா பொது...

“அனுரவே” எம்மை சொந்த நிலங்களில் வாழவிடு – மயிலிட்டி மக்களின் 18 ஆவது வாரக் கண்ணீர்ப் போராட்டம்!

வலிகாமம் வடக்கில் பல தசாப்தங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்