மகள் ‘வாமிகா’வின் பெயருக்கான அர்த்தம்…ரசிகர் கேள்விக்கு கோலி பதில்!

Date:

விராட் கோலியின் மகள் வாமிகாவின் பெயருக்கு இதுதான் அர்த்தமாம்.

இந்திய ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியின் மூலம் தனது மகளான வாமிகாவின் பெயருக்கு என்ன அர்த்தம் என்பதை தெரியப்படுத்தியுள்ளார் இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி.

இந்தியா, நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை இங்கிலாந்து சௌதாம்ப்டான் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து புறப்படவுள்ளனர். இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் தற்போது மும்பையில் தனிமை முகாமில் இருக்கிறார்கள்.

இந்திய அணி வீரர்கள் பலர் தனிமை முகாமில் எப்படி நேரம் போகிறது என்பதைப் புகைப்படம் எடுத்து சமீக ஊடகங்களில் பதிவேற்றி வருகிறார்கள். இந்நிலையில் இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறார்.

அப்போது ரசிகர் ஒருவர் விராட் கோலியிடம், உங்கள் மகளின் பெயரான வாமிகாவிற்கு என்ன அர்த்தம் என்ற கேள்வியைக் கேட்டார். மேலும், மகளின் புகைப்படத்தைக் காண ஆவலோடு காத்திருக்கிறோம் எனவும் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த விராட், வாமிகா என்பது துர்கை கடவுளின் மற்றொரு பெயர் எனக் கூறினார். மேலும் பதிலளித்த அவர், மகளின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யக் கூடாது என நானும் எனது மனைவியும் முடிவு செய்துள்ளோம். எனது மகளுக்கு சமூக ஊடகம் என்றால் என்ன? என தெரிந்த பிறகுதான், அவளின் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றுவோம் எனத் தெரிவித்தார்.

Here's Why Virat Kohli And Anushka Sharma Have "Decided Not To Expose"  Daughter Vamika To Social Media

எங்களது மகளின் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பதிவிட வேண்டாம் என்றும், பத்திரிகைகளுக்கும் இதே வேண்டுகோளை வைக்கிறோம் என்றும் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்