இது ரொம்ப தப்புமா, மானம் தான் முக்கியம்!

Date:

மாடலும், நடிகையுமான ரைசா வில்சன் உள்ளாடை அணியாமல், சட்டை பட்டனையும் போடாமல் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

ரைசா வில்சன் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே ஷாக் ஆகிவிட்டார்கள்.

தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் ரைசா. அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தான் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. அதன் பிறகு அவர் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்த பியார் பிரேமா காதல் படம் வெற்றி பெற்றது. ஹரிஷ், ரைசா ஜோடிக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்தனர். அந்த படத்தை அடுத்து த்ருவி விக்ரமின் வர்மா படத்தில் நடித்தார் ரைசா.

கை நிறைய படங்கள் வைத்திருக்கும் ரைசா ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரொம்ப ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது தன் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் அளிப்பார். தன்னை யாராவது கிண்டல் செய்து மீம்ஸ் போட்டால் கூட ஜாலியாக எடுத்துக் கொள்பவர் ரைசா. இந்நிலையில் அவர் உள்ளாடை அணியாமல், சட்டை பட்டனையும் போடாமல் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

ரைசாவின் புகைப்படங்களை பார்த்த ஜொள்ளு பார்ட்டிகளோ, இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம், அடிக்கடி இது போன்ற புகைப்படங்களை வெளியிடவும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ரசிகர்கள் கூறியிருப்பதாவது, தப்பு ரைசா, தப்பு பண்றீங்க. இந்த மாதிரி எல்லாம் புகைப்படங்கள் வெளியிட்டால் பட வாய்ப்பு கிடைக்கும் என்று யாரோ உங்களுக்கு தவறாக சொல்லியிருக்கிறார்கள். மானம் தான் முக்கியம். முதலில் அந்த சட்டை பட்டனை போடுங்க. ரைசாவுக்கு முகம் தான் அழகு. அப்படி இருக்கும்போது எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று தெரிவித்துள்ளனர்.

அண்மையில் தான் ரைசா ஒரு கிளினிக்கிற்கு சென்ற இடத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் முகம் அலங்கோலமாகிவிட்டது என்று கூறி புகைப்படம் வெளியிட்டார். மேலும் அந்த டாக்டரிடம் நஷ்டஈடு கேட்டார். பதிலுக்கு டாக்டரும் ரைசாவிடம் நஷ்டஈடு கேட்டார். தான் அவருக்கு தவறான சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை என்றார் டாக்டர். கெரியரை பொறுத்த வரை மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து ரைசா வில்சன் நடித்திருக்கும் எஃப்.ஐ.ஆர். படம் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. அந்த படத்தை தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்று நினைத்து தான் ஷூட் செய்தார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் வேறு வழியில்லாமல் ஓடிடியில் வெளியிடுகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்