ஓடிடியில் வெளியாகிறது ‘வாழ்’!

Date:

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வாழ்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான படம் ‘அருவி’. 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தப் படம் வெளியானது. முதன்மைக் கதாபாத்திரத்தில் அதிதி பாலன் நடித்தார். அஞ்சலி வரதன், கவிதாபாரதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்ட இந்தப் படம் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.

சிவகார்த்திகேயனின் உறவினர்தான் அருண் பிரபு புருஷோத்தமன். தனது அடுத்த படத்துக்காக முயன்று கொண்டிருந்தவருக்கு, தனது தயாரிப்பிலேயே படம் இயக்கும் வாய்ப்பை வழங்கினார் சிவகார்த்திகேயன். ‘அருவி’ படம் போலவே, முற்றிலும் புதுமுகங்களை வைத்து ‘வாழ்’ என்னும் படத்தை இயக்கினார்.

2019-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்ட இந்தப் படம், ஜூலை 15-ம் தேதி முடிந்தது. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ‘வாழ்’ படத்தைப் படமாக்கியுள்ளார் அருண் பிரபு புருஷோத்தமன். இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்து, தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியாக, ஓடிடியில் ‘வாழ்’ வெளியாகவுள்ளது. சோனி லைவ் நிறுவனம் இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்