நாய்களிடையே பரவும் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு தாவியது; ஆபத்து இல்லை என ஆய்வாளர்கள் தகவல்!

Date:

நாய்கள் மத்தியில் பரவக்கூடிய கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சுமார் ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா நெருக்கடி உலகையே அச்சுறுத்தி வருகிறது. SARS-CoV2 எனப்படும் கொரோனா வைராஸால் கோவிட்-19 நோய் பரவுகிறது. இந்த வகை கொரோனா வைரஸ் போக வேறு சில கொரோனா வைரஸ்களும் உள்ளன. அவற்றால் மனிதர்களுக்கு பாதிப்பில்லை என்கின்றனர் வல்லுநர்கள்.

இந்நிலையில், நாய்களிடையே பரவக்கூடிய கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவத் தொடங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சிலருக்கு நிமோனியா ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேட்பதற்கு ஆபத்தான வைரஸ் போல தெரிந்தாலும், உண்மையிலேயே இந்த கொரோனாவால் ஆபத்து இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். மலேசியாவில் உள்ள சராவக் பகுதியில், இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாய்களிடையே பரவும் கொரோனா வைரஸ் பற்றி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வாளர்களுக்கு தெரியும். ஆனால், இவை மனிதர்களுக்கு பரவாமல் இருந்ததால் பேசுபொருளாகவில்லை. இந்நிலையில், தற்போது மனிதர்களுக்கு பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இதனால் ஆபத்து இல்லை என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பலே திருடனை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிசார்

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டு...

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்