ஏழுமலையானுக்கு எட்டு வயது சிறுமியுடன் திருமணம்!

Date:

ஏழுமலையான் கோவிலில் சிறுமியுடன் சாமிக்கு திருமணம் செய்து வைத்த விநோத சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ராயதுர்க்கம் நகரில் அமைந்திருக்கும் பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் இன்று நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் சம்பிரதாயத்தின் அடிப்படையில் வெங்கடேஸ்வர சுவாமிக்கு சிறுமியுடன் திருமணம் நடைபெற்றது.

ராயதுர்க்கம் பிரசன்ன வெங்கடேஸ்வரர் சுவாமி கோவிலில் இன்று கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பல ஆண்டுகளாக சம்பிரதாயத்தில் இருக்கும் நடைமுறையின் அடிப்படையில் ராயதுர்க்கத்தை சேர்ந்த ரமேஷ், ஜெயம்மா ஆகியோரின் மகளான எட்டு வயது மௌனிகா உடன் வெங்கடேஸ்வர சாமிக்கு சம்பிரதாய அடிப்படையில் திருமணம் நடத்தப்பட்டது.

இந்த கோவில் கல்யாண உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் நடைபெறுவது வழக்கம்.இந்த நிலையில் கோவில் அர்ச்சகர் வேத மந்திரங்களை ஓதி தாலி கயிறை எடுத்து சிறுமியின் கழுத்தில் தொட்டு, பின்னர் உற்சவரின் திருவடியில் வைத்து ஆசி பெற்று சிறுமியின் தாயிடம் கொடுத்தார்.

தொடர்ந்து சிறுமியின் தாய் ஜெயம்மா தன்னுடைய மகள் கழுத்தில் தாலி கட்டினார்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பிரசன்ன வெங்கடேஸ்வரர் கல்யாண உற்சவத்தின் போது மணமகளாக இடம்பெறும் சிறுமிக்கு மிக சிறப்பான இல் வாழ்க்கை அமையும் என்பது அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பா? சிறையில் கைதிக்கு மெத்தை வழங்கியதாகக் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல்...

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்...

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்