கட்டுங்கடங்காமல் பற்றியெரியும் தீ… கரையொதுங்கும் சொக்லேட், பொருட்களை அள்ளும் மக்கள்!

Date:

கொழும்பு துறைமுகத்திற்கு அருகே தீப்பிடித்த X-PRESS PEARL கப்பலின் கொள்கலன் பாகங்கள், மற்றும் பல பொருட்கள், சொக்லேட் போன்ற சிற்றுண்டிகள் நீர்கொழும்பு, ஜா-எல, கபும்கொட, சேத்தப்படுவ மற்றும் துங்கல்பிட்டிய கரையோரங்களில் ஒதுங்கியுள்ளன.

கரையொதுங்கும் சொக்லேட் போன்ற தின்பண்டங்கள் மற்றும் பொருட்களை சேகரிப்பதில் பலர் ஈடுபட்டுள்ளனர்.

கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தகவல்படி, வத்தளையின் ப்ரிதிபுர தொடக்கம் நீர்கொழும்பு வரையான 9 கிலோ மீற்றர் தூரத்திற்கு பொருட்கள் கரையொதுங்கியுள்ளன.

கப்பலில் இருந்து விழுந்த கொள்கலன், குப்பைகள் கரையொதுங்கியுள்ளன, அவற்றில் இரசாயனம் கலந்துள்ளது என பொதுமக்களிற்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கப்பலின் தீயை அணைக்க பெல்- 212 உலங்கு வானுர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீயை அணைக்க இன்று 425 கிலோகிராம் உலர் இரசாயன தூள் வீசப்பட்டது.

எனினும், நேற்றைய தினத்தை விட இன்று தீ அதிகரித்துள்ளது.

கப்பலின் முன் பகுதியில் பரவிய தீ, இப்பொழுது கப்பலின் அனேக பகுதிகளிற்கு பரவி விட்டது. எனினும், கப்பலின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படவில்லை, எண்ணெய் கசிவு குறித்த தகவல்கள் இல்லையென கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷினி லஹந்தர தெரிவித்தார்.

தீயை அணைக்க இரண்டு இந்திய கப்பல்கள் வந்துள்ளன. மோசமான வானிலை, கடற்கொந்தளிப்பால் மீட்பு பணிகளில் தாமதம் உள்ளது.

கப்பலில் இருந்த 25 பணியாளர்களும் மீட்கப்பட்டள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்ட இரண்டு இந்திய பிரஜைகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்