25.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது: யாழ் நகரிலும் ட்ரோன் கமரா கண்காணிப்பு!

நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணப் பொலிசார் மற்றும் இலங்கை விமானப் படையினரும் இணைந்து ட்ரோன் கமராவில் உதவியுடன் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாண நகரம் நல்லூர் ஆலயம் மற்றும் யாழ் நகரப் பகுதிகளில் விமானப்படையின் ட்ரோன் கமராக்களில் உதவியுடன் பொது மக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு அத்தியாவசிய சேவை தவிர்ந்து பயணி்பவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விமானப்படையின் ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு நடமாடுபவர்கள், பொலீஸ் மோட்டார் சைக்கிள் படையணியினரால் கைது செய்யப்படவுள்ளதாக யாழ்ப்பாணபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும் நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பயணத்தடையின் போது அத்தியாவசிய தேவை தவிர்ந்த வேறு எவரும் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் அவ்வாறு பயணிப்போர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் எனவும் தற்போது நாட்டில் தீவிரமாக பரவி பெரும் தொற்றைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாண மாவட்டத்தில் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து பன்றிகளையும் இழந்த கிளிநொச்சி பண்ணையாளர்

Pagetamil

மாவையின் உடலுக்கு சுமந்திரன் அஞ்சலி

Pagetamil

Leave a Comment