வெளியில் செல்ல வாகனத்தில் வைத்தியர்களின் இலச்சினையை ஒட்டிய 3 பேர் கைது!

Date:

வைத்தியர்களிற்கான இலச்சினையை தமது வாகனத்தில் ஒட்டியபடி பயணித்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நாரஹேன்பிட்டி, விஜேராம மாவத்தை,  மற்றும் கொழும்பு, கோட்டை பகுதிகளில் மூன்று சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தங்கள் வாகனங்களில் மருத்துவரின் சின்னத்தைப் பயன்படுத்தி பயணம் செய்ததாக, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

வெள்ளவத்தையை சேர்ந்த 39 வயதான நபர் நாரஹேன்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார், அவரது வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தனது காரில் மருத்துவரின் சின்னத்தை தவறாக பயன்படுத்தியதற்காக 46 வயதான ஒருவரை சினமன்கார்டன் பொலிசார் கைது செய்தனர்.

இதே குற்றச்சாட்டில், 28 வயதான ஒருவரை கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஐஜி அஜித் ரோஹன கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் எழுத்தாளரின் புத்தங்களை விடுவிக்குமாறு சுங்கத்துறைக்கு பரிந்துரைத்தது மனித உரிமைகள் ஆணைக்குழு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் எழுத்தாளர் பி. பிரதீபனின் இரண்டு புத்தகங்களை...

ஆசிரியை மதிவதனிக்கு நீதி கோரி வவுணதீவில் போராட்டம்

மட்டக்களப்பு திமிலைதீவு கனரக வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த ஆசிரியை மதிவதனி...

ஹிஜாப் மீதாத தடையால் கல்முனை வைத்தியசாலை முஸ்லிம் ஊழியர்களின் உரிமை மீறப்பட்டுள்ளது: மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்ப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையின் போது தலைக்கவசம் (ஹிஜாப்) மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்