25.4 C
Jaffna
January 24, 2025
Pagetamil
உலகம்

கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்கும் நாய்கள்: பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை நாய்கள் வாயிலாக கண்டுபிடிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவைச் சேர்ந்த பிரிட்டனில் எல்.எஸ்.எச்.டி.எம்., பல்கலை நடத்திய ஆராய்ச்சியில் நன்கு பயிற்சி தரப்பட்ட நாய்கள் மோப்ப சக்தி வாயிலாக ஒருவர் கொரோனா நோயாளியா? என்பதை 94 சதவீத துல்லியத்துடன் கண்டுபிடிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து, எல்.எஸ்.எச்.டி.எம்., நோய் தடுப்பு பிரிவு தலைவர் ஜேம்ஸ் லோகன் கூறியதாவது, ஒருவரின் உடம்பில் இருந்து வெளிப்படும் வாசனை வாயிலாக, அவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை நாய்கள் கண்டுபிடித்து விடுகின்றன. இது, எங்கள் ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. இதற்காக மருத்துவ கண்டுபிடிப்பு நாய்கள் பிரிவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள், நாய்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கினர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உடை, முக கவசம், சாக்ஸ் உள்ளிட்டவற்றை நாய்களிடம் கொடுத்து, மோப்ப சக்தியை உணரச் செய்தனர். இதையடுத்து, 3,758 பேரின் மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டன. அவற்றில், கொரோனா நோயாளிகள் 325 பேர் நோயால் பாதிக்கப்படாத 675 பேரின் சளி மாதிரிகளை நாய்கள் துல்லியமாக அடையாளம் கண்டன. இது, மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையத்தில் இரண்டு மோப்ப நாய்கள் மூலம், அரை மணி நேரத்தில் 300 பயணியரிடம் கொரோனா பாதிப்பு உண்டா, இல்லையா என்பதை கண்டறிந்து விடலாம். இவ்வாறு அவர் கூறினார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நேபாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியர்

east tamil

அமேசோன் நிறுவன 1,700 ஊழியர்கள் பணிநீக்கம்

east tamil

பிரித்தானிய கடல் எல்லைக்குள் நுழைந்த 2வது ரஷ்ய கப்பல்

east tamil

மியன்மாரில் நிலநடுக்கம்

east tamil

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் திகதி அறிவிப்பு

east tamil

Leave a Comment