இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் பயணிகளை பஹ்ரைன் “சிவப்பு பட்டியலில்” இன்று முதல் இணைத்துள்ளது. இந்த நாட்டினர் நுழைவதை தடை செய்துள்ளது.
பஹ்ரைன் ஊடகங்கள் குடிமக்கள் மற்றும் வதிவிட விசா வைத்திருப்பவர்கள் நாடு திரும்ப தடையில்லை. ஆனால் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பி.சி.ஆர் பரிசோதனையை வழங்க வேண்டும் மற்றும் பஹ்ரைனிற்கு வந்த 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.
ஏனைய நாடுகளில் இருந்து பஹ்ரைன்னிற்குள் நுழையும் தடுப்பூசி போடாத நபர்களுக்கும், தங்கள் வீடுகளில் அல்லது தனிமைப்படுத்தல் மையங்களில் முன்னெச்சரிக்கை 10 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
பஹ்ரைன் குடிமக்கள் மற்றும் வதிவிட விசா வைத்திருப்பவர்கள் ஏறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக நடத்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனை சான்றிதழை வழங்க வேண்டும் . பஹ்ரைனிற்கு வந்த பத்தாம் நாளில் மற்றொரு பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.




