கட்டுப்பாட்டை மீறி கண்ணகி அம்மனிடம் செல்பவர்களால் சிக்கல்!

Date:

பயணத்தடை அமுல்படுத்தபட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் உள்ள கண்ணகி அம்மன் கோவில் நிகழ்விற்கு வழமை போன்று மக்கள் பயணங்களில் ஈடுபடுவதை காண முடிகின்றது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள இக்கோயில்களுக்கு உடையார் வீதி மாதவன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உள்ளக வீதிகளில் கொரோனா சுகாதார நடைமுறைகளை மீறி தத்தமது வாகனங்களில் வழமை போன்று நடமாடி வருகின்றனர்.

குறித்த பகுதிகளில் பொலிஸார் சுகாதார தரப்பினர் பாதுகாப்பு படையினரின் நடமாட்டம் மந்த கதியில் உள்ளதை சந்தர்பப்ங்களாக பயன்படுத்தி இவ்வாறு பயணத்தடை மீறலில் ஈடுபடுகின்றனர்.

அத்தியவசிய தேவைகள் தவிர்ந்த விடயங்களில் ஈடுபடாது வீடுகளில் முடங்கி இருக்குமாறு அடிக்கடி ஒலிபெருக்கி வாயிலாக சுகாதார தரப்பினர் வேண்டுகோள் விடுத்த போதிலும் பெரியோர்கள் முதல் இளைஞர்கள் வரை இவ்வாறு பயணத்தடைகளை மிறி செயற்படுவதை காண முடிகின்றது.கடந்த 21 ஆந் திகதி 11 மணி முதல் எதிர்வரும் 25 செவ்வாய்க்கிழமை 4 மணிவரை பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் இவ்வாறு பயணத்தடையை மீறும் செயற்பாடு தொடர்கின்றது.

நாட்டின் சகல பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகின்ற கொரொனாவின் 3 ஆவது அலையை தவிர்பப்து நாட்டின் உள்ள சகல பிரஜைகளின் கடமையல்லவா என்பதை எமது ஊடகம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

-பா.டிலான்-

spot_imgspot_img

More like this
Related

சிறைகளில் மதத் தலைவர்களின் நிலைகண்டு வெம்பியிருக்கிறேன் – அநுர ஜனாதிபதிக்கு நினைவுபடுத்திய டக்ளஸ்

அனைத்து மதங்களின் தலைவர்களும் சிறைச்சாலைகளில் கௌரவமாக நடாத்தப்படுவதை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த...

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டமை சகோதரத்துவ நம்பிக்கையை வலுப்படுத்துகிறது – காரைதீவு தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு...

உக்ரைன் ஆயுதங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திய Starlink? அமெரிக்கா மீது சந்தேகம்!

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Starlink இணையச் சேவையில் விதிக்கப்பட்ட வேகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்