‘‘ஸ்ரேயா எந்த தொல்லையும் கொடுக்கவில்லை’’ -டைரக்டர் மாதேஷ்

Date:

மதுர, அரசாங்கம், மோகினி, மிரட்டல் ஆகிய படங்களை இயக்கிய மாதேஷ், இப்போது ‘சண்டக்காரி’ படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில், ஸ்ரேயா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

‘‘பொதுவாக மும்பை நடிகை என்றாலே படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார்கள். உங்கள் படத்தில் ஸ்ரேயா எப்படி?’’ என்ற கேள்விக்கு டைரக்டர் மாதேஷ் பதில் அளித்தார்.

‘‘மும்பை கதாநாயகிகள் என்றாலே பந்தா பண்ணுவார்கள். தாமதமாக வருவார்கள். பாதுகாப்பு படையுடன் வருவார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறேன். என் கதைக்கு ஸ்ரேயா பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய சென்றேன். உள்ளுக்குள் பயம் இருந்தது. ஆனால் நான் பயப்பட்ட மாதிரி ஸ்ரேயா இல்லை. பந்தாவும் இல்லை. பாதுகாப்பு படையும் கேட்கவில்லை.

சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து விடுவார். எந்த தொல்லையும் கிடையாது. அவருக்கு படப்பிடிப்பு முடிந்து விட்டாலும், ‘செட்’டை விட்டுப்போகமாட்டார். மற்ற நடிகர்கள் நடிப்பதை பார்த்துக்கொண்டிருப்பார்’’ என்றார் மாதேஷ்

spot_imgspot_img

More like this
Related

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...

மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள சில அதிகாரிகள் சட்டவிரோத சுருக்கு வலையின் ஆதாரத்தை அழித்து நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தி வருகின்றனர்

மட்டக்களப்பு கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை கடற்றொழில் நீரியல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்