இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயணிக்கும் விமானத்தை தனது வான்வெளியைப் பயன்படுத்தி இலங்கைக்கு பயணிக்க இந்தியா அனுமதித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று மாலை மாலை 4.15 மணியளவில் இலங்கைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2019ஆம் ஆண்டில் சவுதி அரேபியா, அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட போது, காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக கூறி, மோடியின் விமானம் தனது வான்பரப்பை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி மறுத்திருந்தது.
எனினும், இம்முறை இலங்கைப் பயணத்திற்காக பாகிஸ்தான் தரப்பின் விண்ணப்பத்தை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1