முல்லைத்தீவு கொரோனா நிலவரம்!

Date:

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணியுடன் இதுவரை முல்லைத்தீவில் 501 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 58 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் ஏனைய 443 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1310 குடும்பங்களைச் சேர்ந்த 5019 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். 768 குடும்பங்களைச் சேர்ந்த 2845 பேர் தனிமைப்படுத்தல் காலப்பகுதியை நிறைவு செய்துள்ளனர். ஏனைய 538 குடும்பங்களைச் சேர்ந்த 2153 பேர் தற்போதும் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் 443 நபர்களில்- ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவில் 23 பேரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 75 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவில் 342 பேரும், துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவில் ஒருவரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலகப்பிரிவில் இருவரும் உள்ளடங்குகின்றனர்

சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 58 நபர்களின் விபரம்- ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவில் 02 பேரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 13 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவில் 16 பேரும், துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவில் 17 பேரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலகப்பிரிவில் 10 பேரும் உள்ளடங்குகின்றனர்.

தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 538 குடும்பங்களில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவில் 78 குடும்பங்களும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 93 குடும்பங்களும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவில் 341 குடும்பங்களும், துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவில் 12 குடும்பங்களும், மாந்தை கிழக்கு பிரதேச செயலகப்பிரிவில் 8 குடும்பங்களும், வெலிஓயா பிரதேச செயலகப்பிரிவில் 06 குடும்பங்களும் உள்ளடங்குகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...

தமிழ் எழுத்தாளரின் புத்தங்களை விடுவிக்குமாறு சுங்கத்துறைக்கு பரிந்துரைத்தது மனித உரிமைகள் ஆணைக்குழு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் எழுத்தாளர் பி. பிரதீபனின் இரண்டு புத்தகங்களை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்