மரண வீட்டுக்குள் நுழைந்து திருடிய தம்பதி கைது!

Date:

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் மரணச்சடங்கில் உறவினர் போல பாசாங்குகாட்டி கிளிநொச்சிப்பகுதியைச் சேர்ந்த கணவன் மணைவி இருவரும் வீட்டில் உள்ள அலுமாரியினை திறந்து அதிலிருந்த ஜந்து இலட்சம் ரூபா பணமும் ஒரு பவுண் தங்கநகையினையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.

பின்னர் மரணச்சடங்கு முடிவுற்றபின் வீட்டு அலுமாரியினை திறந்தபோது பணம் நகை இல்லாததை உணர்ந்தவர்கள் தேடியபோதும் கிடைக்கவில்லை. பின்னர் சந்தேகம் கொண்டு தருமபுரம் போலிசாரிடம் முறைபாடு பதிவு செய்யப்பட்டதுடன் விசாரனைகளை ஆரம்பித்த போலிசார் கண்காணிப்பு கமரா மூலம் திருடர்களை இனங்காண்டனர்.

நேற்று (18) திருடர்களான கணவன் மனைவி இருவரும் பொலிசாரல் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாத தருமபுர போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி ஹேரத் தெரிவித்தார்.

திருட்டு தம்பதிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பாதசாரி கடவையில் ரோஸ்மேரியை பந்தாடிய பிரதேசசெயலாளர்!

மாத்தறை பொது மருத்துவமனைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் வெள்ளைக்கோடு இடத்தில்,...

ஆற்றில் மிதந்த கூலிப்படை உறுப்பினரின் சடலம்

கின் ஆற்றில், கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையிலும், கால்கள் ஒரு கொங்கிரீட்...

தாக்குதல்களை நிறுத்தி பேச்சை தொடர அமெரிக்கா, ஈரான் இணக்கம்!

ஈரானும் அமெரிக்காவும் சமீபத்திய மோதல்களை நிறுத்தி, ஹோர்முஸ் ஜலசந்தி மீதான தங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்