இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள்!

Date:

இன்று முள்ளிவாய்க்கால் நினைவுதினம்.

12 வருடங்களின் முன்னர் முடிவடைந்த ஆயுத மோதல்களின் முடிவில் கொல்லப்பட்ட மக்களை தமிழ்மக்கள், இன்று “முள்ளிவாய்க்கால் நினைவுதினம்“ ஆக அனுட்டிக்கிறார்கள்.

யுத்தத்தில் இறுதி கட்டத்தில் மூடப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் இன்னும் சரியாக அறிக்கையிடப்படாத நிலைமை காணப்படுகிறது.

தமிழ் மக்கள் ஒரு தேசமாக ஒன்றிணைந்து, இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டிக்கிறார்கள். எனினும், தற்போதைய அரசு தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமைக்கும் இயன்றவரை தடைகளை ஏற்படுத்தி வருகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுகாதார நடைமுறைகளை பேணி அஞ்சலி நடத்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் நேற்று அனுமதித்தது. எனினும், நேற்று மாலையே முல்லைத்தீவு பகுதியின் இரண்டு பிரதேச செயலாளர்கள் முடக்கப்பட்டதால், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, தெற்கில் இன்று யுத்தத்தின் நிறைவை குறிக்கும் வெற்றி மனநிலையுடனான கொண்டாட்டங்கள் இடம்பெறுகிறது. இது இலங்கையில் வெவ்வேறு அடையாளங்களுடனான இரண்டு இனங்கள் இணக்கமில்லாத சூழலில் வாழ்வதை புலப்படுத்துகிறது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை

இலங்கை தனது முதல் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான ரோபோ அறுவை சிகிச்சைகளை...

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்