மன்னாரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்பு!

Date:

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள மன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரம் யூட் வீதி காட்டு பகுதியில் மறைத்து வைத்திருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை பேசாலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்டுள்ளனர்.

-மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் 14கிலோ 175 கிராம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கஞ்சா பொதிகள் சுமார் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என தெரிய வந்துள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்ச்சி மற்றும் பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சோமயித், உப பொலிஸ் பரிசோதகர் விவேகானந்த் தலைமையிலான குழுவினர் மேற்படி கேரள கஞ்சாவினை கைப்பற்றி உள்ளனர்.

சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட கஞ்சா மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்