பட்டம் விட கூரைக்கு ஏறிய 3 பேர் நிலத்தில் விழுந்து மரணம்: நிர்க்கதியான தமிழ் பெண்!

Date:

காலி, மகுலவ பகுதியில் வீட்டு கூரையில் ஏறி பட்டம் விட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றது. வீட்டு கூரை உடைந்ததால், அவர்கள் நிலத்தில் விழுந்து உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் மரண விசாரணையின் பின்னர், பிரேத பரிசோதனை இடம்பெற்று சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. மூளை, மண்டையோட்டு காயங்களினால் அவர்கள் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வராஜா ஜெகதீஸ்வரன் (41), ஜெகதீஸ்வரன் சதேஸ் (05), இல்லபெரும ரங்க அசோக (43) ஆகியோரே உயிரிழந்தனர்.

மூன்று மாடி கட்டிடத்தில் லிப்ட் அமைக்க தயார் செய்யப்பட்ட பகுதிக்கு மேலே அமைக்கப்பட்டிருந்த கூரை இடிந்து விழுந்து தரையில் விழுந்தனர்.

செல்வராஜா ஜெயதீஸ்வரனின் மனைவி கந்தையா வசந்தகுமாரி (35) மரண விசாரணையில் சாட்சியமளிததார். அவர்களது வீட்டிலேயே விபத்து நேர்ந்தது.

இல்லபெரும ரங்க அசோகவின் மனைவி அமர செவ்வந்தி சமரவிக்ரம அராச்சிகே (29) மரணவிசாரணையின் போது-  என் கணவரும் மகனும் இறந்துவிட்டார்கள். எங்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இறந்த மகனுக்கு 5 வயது. மகளுக்கு 8 வயது. அவர் காலி ஸ்ரீ ஹார்ட் கான்வென்ட்டில் படித்து வருகிறார். கணவர் நகை வேலை செய்தார். நான் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்கிறேன். 14ஆம் திகதி நான் இரவு கடமை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தேன். கணவர் என்னை சாப்பிட சொன்னார். சோர்வாக இருந்ததால், நான் படுக்கைக்குச் சென்றேன். மாலை 4.00 மணியளவில், மகனுடன் பட்டம் விட பக்கத்து வீட்டுக்குச் செல்வதாக கணவர் கூறினார். பக்கத்து வீட்டுக்காரரும் வந்திருந்தார்.

கட்டுமானம் நடக்கும் வீட்டின் லிப்ட் பகுதிக்கு மேலுள்ள கூரைக்கு ஏறியுள்ளனர். அது உடைந்து கீழே விழுந்தனர். மகள் ஓடி வந்து அப்பா விழுந்துவிட்டார் என்று சொன்னார். நான் அங்கே ஓடினேன். அக்கம்பக்கத்தினரும் கூடினர். மூவரும் தரையில் விழுந்து கிடந்தனர். மூவருக்கும் தலையில் காயங்கள் இருந்தன, இரத்தப்போக்கு இருந்தது. குழந்தையின் மூக்கிலும் காயம் ஏற்பட்டது. மூவரும் கராபிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூவரும் இறந்துவிட்டார்கள் என்பது பின்னர் அறியப்பட்டது. மருத்துவமனையில் பி.சி.ஆர். விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. சோதனைகள் கொரோனா இல்லாததை உறுதிப்படுத்தின“ என்றார்.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்