26.2 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இந்தியா உலகம்

இந்தியாவில் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியர்கள் மீண்டும் நாடு திரும்பினர்- பயண தடை முடிவு!

இந்தியாவில் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியர்களை சொந்த நாட்டில் கொண்டு போய்ச்சேர்ப்பதற்கான முதல் விமானம் ஆஸ்திரேலியா சென்றடைந்தது.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை காட்டுத்தீயாய் பரவத் தொடங்கிய போது ஆஸ்திரேலியா அதிரடியாக பயண தடை விதித்தது. இதன்படி ஆஸ்திரேலியர்கள், இந்தியாவில் இருந்து தடையை மீறி நாடு திரும்பினால் 5 ஆண்டு வரை சிறையும், 66 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் வரையில் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த பயண தடை நன்றாக வேலை செய்ததாக ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரீசன் தெரிவித்தார். இந்த தடை உத்தரவு முடிவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியர்களை சொந்த நாட்டில் கொண்டு போய்ச்சேர்ப்பதற்கான முதல் விமானம் தயாரானது.

இதில் 150 பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 பேர் மட்டுமே பயணித்தனர். எஞ்சியவர்களில் பெரும்பாலோர் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதால் பயணிக்க முடியாமல் போய்விட்டது என இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ பேரல் தெரிவித்தார். இந்த விமானம் நேற்று ஆஸ்திரேலியாவின் டார்வின் போய் தரை இறங்கியது.

இந்த விமானம் ஆஸ்திரேலியர்களை ஏற்றிச்செல்ல டெல்லி வந்தபோது, ஆஸ்திரேலியாவில் இருந்து 1,056 வென்டிலேட்டர்கள், 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ கருவிகளை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

Pagetamil

மருதங்கேணி பொலிஸாரால் சற்றுமுன் இரண்டு பெண்கள் கைது: மேலும் இருவருக்கு அழைப்பு

east tamil

ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி

east tamil

மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த மாணவர்கள் கேரளாவில் கொடூரம்

east tamil

தாய்வானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 15 பேர் காயம்

east tamil

Leave a Comment