யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் – பருத்தித்துறை வீதியின் கனகம்புள்ளியடி சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (13) இரவு கனகம்புள்ளியடி சந்தி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை வேகமாக பயணித்த வான் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் செலுத்தியவரும், அதில் பயணித்த சிறுவனும் பலத்த காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
மட்டுவில் தெற்கு பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய தந்தையும், 9 வயதுடைய அவரது மகனுமே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




