மட்டக்களப்பில் 2024ம் ஆண்டு வீடு உடைத்து கையடக்க தொலைபேசி பணம் திருடிய சம்பவம் கையடக்க தொலைபேசி விற்பனை உரிமையாளர்கள் 3 பேர் உட்பட 4 பேர் கைது

Date:

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அம்புறோஸ் வீதியில் வீடு ஒன்றை கடந்த 2024ம் ஆண்டு உடைத்து அங்கிருந்த 40 ஆயிரம் ரூபா கையடக்க தொலைபேசி 5500 ரூபா பணம் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக குறித்த திருடப்பட்ட கையடக்க தொலைபேசியை கடையில் இருந்து வாங்கியவர் மற்றும் அதனை விற்பனை செய்த கடை உரிமையாளர் 3 பேர் உட்பட 4 பேரை இன்று வியாழக்கிழமை (5) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் கடந்த 2024 ம் ஆண்டு ஏப்ரல் 24 ம் திகதி பூட்டியிருந்த வீட்டை உடைத்து அங்கிருந்து  40 ஆயிரம் ரூபா கையடக்க தொலைபேசி 5500 ரூபா பணம் திருடர்களால் திருட்டுப் போய் இருந்ததையடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்தனர்.

இது தொடர்பாக விசாரணைகள் இடம் பெற்று வந்த நிலையில் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிற்கு திருட்டு போன கையடக்க தொலைபேசி தொடர்பான ஆதாரங்களை அனுப்பி வைத்தான் பிரகாரம் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் குறித்த கையடக்க தொலைபேசியை பாவித்து வருபவர் தொடர்பாக விபரங்களை அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையிலான குழுவின் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் திருட்டு தொலைபேசியை பாவித்து வந்த ஒருவரை நகர் பகுதியில் வைத்து கைது செய்து விசாரணையில் அவர் காத்தான்குடியில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் பணம் கொடுத்து வாங்கியதாக தெரியவந்ததையடுத்து  அதன் உரிமையாளரை கைது செய்தனர்

அதனை தொடர்ந்து விசாரணையில் அவர் வாங்கிய மேலும் இரு கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் உட்பட 4 பேரை இன்று வியாழக்கிழமை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் 24,38,45,50 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் மட்டக்களப்பு நகர் மற்றும் காத்தான்கு பகுதிகளச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஸர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

முத்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

ஷார்ஜாவில் நாடு கடத்தப்பட்ட திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கைவாரு முத்து என்றழைக்கப்படும்...

ஆரையம்பதியில் பெண் ஒருவர் மீது பெற்றோல் ஊற்றி தீவைப்பு பெண் உயிரிழப்பு தீ வைத்த உறவினரான ஆண் கைது

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் வீடு ஒன்றின் வெளிப் பகுதியில் கதிரையில் உட்காந்திருந்த...

2027 ஏப்ரல் வரை TIN சான்றிதழ் கட்டாயமில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்