கல்முனையில் கடற்படையும் மதுவரித் திணைக்களமும் இணைந்த விசேட நடவடிக்கை- 6 கிலோ மூக்குத்தூளுடன் சந்தேகநபர் கைது

Date:

இலங்கை கடற்படையினரும் கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக உடைமையில் வைத்திருந்த கஞ்சா மற்றும் புகையிலைக் கலவையினால் தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ‘மூக்குத்தூள்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சோதனை நடவடிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை (03) கல்முனைக்குடி பகுதியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான ‘தீகாயு’  கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இக் கூட்டு நடவடிக்கை திட்டமிடப்பட்டது.

இதன்போது கல்முனைக்குடி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரைச் சோதனையிட்டபோது, அவரிடமிருந்து சட்டவிரோத விற்பனைக்காகப் பொதி செய்யப்பட்டிருந்த 6 கிலோகிராமிற்கும் அதிகமான எடை கொண்ட 94 சிறிய மூக்குத்தூள் பொதிகள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையுடனும், கைது செய்யப்பட்ட சந்தேகநபருடனும் மேலதிக சட்டபூர்வ நடவடிக்கைகளுக்காகக் கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகத்திடம் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை உப பிரதேச செயலாளர் தன்னை “பிரதேச செயலாளர்” எனக் குறிப்பிடும் ஆவணங்கள் நீதிமன்றத்தில் முன்வைப்பு

கல்முனையன்ஸ் போரம் சார்பில் மனுதாரர் முபாரிஸ் எம். ஹனீபா அவர்களினால் தாக்கல்...

ஈரான் இரசாயன ஆயுதங்களை தயாரிக்கிறது: அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்த இஸ்ரேல்

ஈரான் தனது எதிரிகளுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகி வருவதாகக்...

திருமலை துப்பாக்கிச்சூட்டின் பின்னணி!

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் கடந்த முன்தினம் (2-ஆம் திகதி) இரவு நடத்தப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்