தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் வைரஸ் தொற்று வேகமாக பரவுவதாக அடையாளங் காணப்பட்டு தற்போது முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ரூபா 5000 பெறுமதியான நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளன.
20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இந்த பொதிகள் சதோச ஊடாக வழங்கப்படவுள்ளன.
கொவிட் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை ஏற்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்களூடாக தெரிவு செய்யப்படும் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிவாரணப் பொதிகளை விநியோகிப்பதற்காக மாத்திரம் நாடளாவிய ரீதியிலுள்ள சதொச விற்பனை நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த பொதியில் அடங்கியுள்ள பொருட்களின் விபரங்கள்-
வெள்ளை நாட்டு அரிசி 10 கிலோ
மீன் ரின் 500 கிராம்
சிவப்பு அரிசி 5 கிலோ
பெரிய வெங்காயம் 3 கிலோ
நூடுல்ஸ் 1 கிலோ
ரொட்டி மாவு 3 கிலோ
தேயிலை 200 கிராம்
கிரீம் கிராக்கர் பிஸ்கட் 500 கிராம்
உருளைக்கிழங்கு (உள்ளூர்) 3 கிலோ
மிளகு 100 கிராம்
மேரி பிஸ்கட் 300 கிராம் பாக்கெட் 1
சிவப்பு பயறு 2 கிலோ
உப்பு 1 கிலோ
முகக்கவசம் 10
வெள்ளை சீனி 1 கிலோ
மிளகாய் தூள் 200 கிராம்
கிருமிநாசினி திரவம் 100 மில்லி
சிவப்பு சீனி 1 கிலோ
90 கிராம் சோயா 02 பாக்கெட்டுகள்