அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்து – குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!

Date:

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 9.31 மணியளவில், மாடிசன் நகரிலிருந்து சுமார் 64 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள டெல்லோனா பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஐந்து பெரியவர்களும் ஒரு குழந்தையும் அடங்குவதாக சாக் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

விபத்தினால் தரையில் இருந்தவர்களுக்கு காயங்களோ, கட்டடங்களுக்கு சேதங்களோ ஏற்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் இல்லை. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகமும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் விசாரணைக்கு உதவவுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

சிறைகளில் மதத் தலைவர்களின் நிலைகண்டு வெம்பியிருக்கிறேன் – அநுர ஜனாதிபதிக்கு நினைவுபடுத்திய டக்ளஸ்

அனைத்து மதங்களின் தலைவர்களும் சிறைச்சாலைகளில் கௌரவமாக நடாத்தப்படுவதை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த...

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டமை சகோதரத்துவ நம்பிக்கையை வலுப்படுத்துகிறது – காரைதீவு தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு...

உக்ரைன் ஆயுதங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திய Starlink? அமெரிக்கா மீது சந்தேகம்!

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Starlink இணையச் சேவையில் விதிக்கப்பட்ட வேகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்