“திலீபன் சிலை எங்கே?” — யாழ் மாநகர சபை அமர்வில் வெடித்த கடும் வாக்குவாதம்!

Date:

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விடயம் தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் கடும் அமளி துமளி ஏற்பட்டது.
யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் நேற்று மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றபோதே இந்நிலை ஏற்பட்டது.
கடந்த கூட்ட அறிக்கையை அங்கீகரிப்பதற்காக எடுக்கப்பட்ட போதே அதில் உள்ள சில விடயங்களை நீக்க கோரி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்ட நிலையில் மாறி மாறி ஒவ்வொரு கட்சிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன.
தொடர்ந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய திருத்தங்களுடன் கடந்த கூட்ட அறிக்கை அங்கீகரிக்கப்பட்டது.
கடந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இடையிலேயே தியாக தீபம் திலீபனின் சிலையை வைப்பதற்கு மாநகர சபையில் அனுமதி கோரப்பட்டு தற்காலிக அனுமதி வழங்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 27ம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் குறித்த சிலை அகற்றப்பட்டது.
spot_imgspot_img

More like this
Related

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...

சவுதி விமான நிலைய தாக்குதல்களில் 3 பேர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்கா ஆகிய இடங்களில் உள்ள விமான...

பழைய பேருந்து பாதி வழியிலேயே நின்றது: பாடசாலை மாணவர்கள் நிர்க்கதி!

சேந்தாங்குளத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற இ.போ.ச பேருந்து பழுதடைந்ததால், யாழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்