புகையிரதம் மோதி ஒருவர் பலி

Date:

யாழ்ப்பாணம் – அரியாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் பணியாளரான நாகராசா சூரியகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இன்று மதியம் புகையிரதம் புங்கன்குளம் பகுதியில் பயணித்தபோது புகையிரதக் கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பாடசாலை விட்டு வீடு திரும்பிய உயிரிழந்தவரின் மகளான பாடசாலை மாணவி படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து நடந்த குறித்த புகையிரதக் கடவையில் நீண்ட காலமாக ஊழியர்கள் கடமையில் இல்லை எனவும் ஒலி சமிக்ஞை உரிய முறையில் இயங்குவதில்லை எனவும் பாதுகாப்பற்ற முறையில் கடவை காணப்படுவதாகவும் இதனால் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துடன் மேலும் இது தொடர்பில் இனியாவது உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கொக்கட்டிச்சோலை கண்டியனாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 10 பெரல் கோடா மீட்பு

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்