துன்னாலையில் இளைஞன் வெட்டிக்கொலை!

Date:

பருத்தித்துறை – துன்னாலையில் நேற்று (09) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.

குறித்த ஒரு இரு தரப்பினரிடையே தொடர்ச்சியான பகை இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கொல்லப்பட்ட நபரை நேற்று இரவு பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர், ஓராங்கட்டை பகுதியில் வைத்து அவர் மீது கொடூர தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டனர். இதன்போது குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலையை மேற்கொண்ட நால்வரும் தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமானது தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

36 ஆண்டுகளாகத் தொடரும் நில இழப்பு – 28 ஆவது வாரமாகவும் தொடரும் மயிலிட்டி மக்களின் போராட்டம்!

மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளையும் வாழ்விடங்களையும் விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும்...

மயிலத்தமடு – மாதவனை விவகாரம்: நவம்பர் 2இல் மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் நீண்டகாலமாக தொடர்ந்து இடம்பெற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்