மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த காலத்தில் ஓட்டமாவடி காளி கோவிலை இடித்தமை, நீதவானை இடமாற்றியது, தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தது மற்றும் பல ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சூறையாடியுள்ளார் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை (22) முறைப்பாடு செய்துள்ளதாக ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.
ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் .இன்று சனிக்கிழமை (22) மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா எதிராக முறைப்பாடு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 1990ம் ஆண்டில் இருந்து ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா இந்த கிழக்கு மாகாணத்திற்கு செய்த அநீதிகள் இரு சமூகங்களையும் பிரித்ததுடன் மட்டுமல்ல ஒன்றாக பின்னிப் பிணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இன துவேசம் மூலம் பிளைவை ஏற்படுத்தி வரும் செய்யும் செயல்பாடு இன்று முற்றுப்பெறும்.
இவர் தொடர்பான சகல ஆவணங்களையும் இறுவெட்டு மூலமும் எழுத்து மூலமும், ஆவண புகைப்படங்களை மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் வழங்கி முறைப்பாடு செய்துள்ளார்.
அதேவேளை இஸ்லாமிய மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இது இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது அல்ல அவர்களை எப்போதும் நேசிப்பவன் எனவே இது ஒரு தனிநபர் அராஜகத்துக்கு எதிரானது ஆகவே தமிழ் பகுதியிலும் இப்படியான அராஜகம் செய்த ஆதிக்கத்தை உடைத்துள்ளேன். அதே மாதிரியான ஒரு செயல்பாடுதான் இது இதனை இஸ்லாமிய மக்களுக்கு எதிரான செயற்பாடாக கருதவேண்டாம். என்றார்.




