இன்று(13) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரையிலான காலப்பகுதியில் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகியிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி மாவட்டததில் ஹினிதுமவில் 190 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, தென்மேற்கு குறிப்பாக தெற்கு, மேல், சப்பிரகமுவ, வடமத்தி மத்திய மாகாணங்களில் மழையுடனான கால நிலை மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் சில இடங்களில் இரவு வேளையில் 200 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி இடம்பெறக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



