புயல் உருவாகலாம்: தமிழக மீனவர்களிற்கு எச்சரிக்கை!

Date:

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. புயல் உருவாக வாய்ப்பிருப்பதால் அரபிக்கடலில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் புதியதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறை காற்றுடன் (30 முதல் 40 கி.மீ., வேகத்தில்) கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

14-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வடபகுதி உள் மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை யும் பெய்யும். 15-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும். தென் மாவட்டங்களில் கனமழை முதல் அடைமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால், காற்றின் இயல்பான வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீச வாய்ப்பு உள்ளதால் கடலோரம் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

“14-ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் 14, 15-ம் தேதிகளில் சூறாவளி காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்றும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரேபிய கடல் கடற்கரை, தெற்கு தமிழக கடற்கரையில் உள்ள மீனவர்கள் (Fishermen) கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், மே 14-16 தேதிக்கு இடையில் அரேபிய கடலில் சூறாவளி உருவாகலாம் என்பதால், கடலில் உள்ளவர்கள் உடனடியாக அருகிலுள்ள துறைமுகத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் மீனவர்களுக்கு எச்சரிக்குமாறு இந்திய கடலோர காவல்படை மீன்வளத்துறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை : புலமைப்பரிசில் பரீட்சையில் 48 மாணவர்கள் சித்தி

கல்முனை கல்வி வலய காரைதீவு கல்விக் கோட்டத்தில் 2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்