செல்வச்சந்நிதி வருடாந்த மஹோற்சவம்

Date:

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய 2026ஆம் ஆண்டு மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

 வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டு வருடாந்த மகோற்சவம், இன்று (13.08.2026) அதிகாலை

பிரதமகுரு சிவஶ்ரீ பாலேந்திரா ஐயா தலைமையில்

நடைபெற்ற விசேட பூசைகளுடன் 12:20 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நள்ளிரவு 12ஆம் திகதி நிறைவடைந்து 13ஆம் திகதி அதிகாலை பிறந்த வேளையில், பக்தர்கள் புடைசூழ்ந்த நிலையில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, பக்தி பரவசத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக வள்ளிக்கொடி முளைத்தமை பக்தர்களிடையே பெரும் ஆன்மிக உணர்வையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது. இதனை முருகப்பெருமானின் அருளின் அடையாளமாக பக்தர்கள் பக்தியுடன் நோக்கினர்.
யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற முருகத்தலங்களில் ஒன்றான செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம்பெற்ற இக்கொடியேற்ற நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப்பெருமானை வழிபட்டு அருள் பெற்றனர்.
 இவ்வாறு பக்தி, ஆன்மிக உணர்வு மற்றும் பாரம்பரிய சிறப்புடன் 2026ஆம் ஆண்டு செல்வச்சந்நிதி முருகன் ஆலய மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.
எதிர் வரும் 26ம் திகதி சப்பரத் திருவிழாவும், 27ம் திகதி தேர்த் திருவிழாவும் ஆலயத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ பாலேந்திரா ஐயா தலைமையில் வருடாந்த மஹோற்சவம் இடம்பெறும்.
spot_imgspot_img

More like this
Related

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்