பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு: லண்டன் கூட்டாளிக்கு பிடிவிறாந்து!

Date:

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று திங்கட்கிழமை (13) காணொளி ஊடாக உத்தரவிட்டதுடன், இலண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸ்ஸை கைது செய்ய பிடிவிறாந்து பிறப்பித்தும் கட்டளையிட்டார்.

2008 ம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டது, வர்த்தகர் ஒருவரை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிள்ளையான் மீது குற்றம்சுமத்தப்பட்டதுடன், காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் சிஜடி கைது செய்தனர்.

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த யூன் 17 ம் திகதி சிஜடி யினர் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து அவர்களை யூன் 30 வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் நீதிமன்றில் பிள்ளையான் உட்பட்ட 3 பேரையும் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து 3 பேரும் தொடர் விளக்கமறியலில் இருந்து வருகின்ற நிலையில் இன்று திங்கட்கிழமை (13) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொண்டபோது சந்தேக நபரான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளியான முகமட் சிபானை மட்டும் ஆஜர்படுத்திய சிஜடி யினர் பிள்ளையான் மற்றும் முகமட் சகீத் ஆகிய இருவரையும் பாதுகாப்பு காரணமாக நீதிமன்றிற்கு அழைத்துவர முடியாதது தொடர்பாக நீதிமன்றிற்கு தெரிவித்தனனர்

இதனை ஆராய்ந்த நீதவான் பிள்ளையான் மற்றைய சந்தேகநபர் ஆகிய இருவரையும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைகளில் (சூம்) இணைய வழி காணொளி ஊடாக பார்வையிட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் எதிர்வரும் 24 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸ் பாய்ஸ்க்கு பிடிவிறாந்து பிறப்பித்துk் கட்டளையிட்டு உத்தரவு பிறப்பித்தார்

இதேவேளை கடந்த 30ஆம் திகதி பிள்ளையானை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிஜடியினர் அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...

நாளை சில பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில்

முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்