தமிழகத்தில் தலைவிரிக்கும் அராஜக ஆட்சி!

Date:

தமிழக தொழில்​துறை அமைச்​சர் கீர்த்​தனா, ஆதவ் அர்ஜூனா குடும்ப உறுப்பினரின் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்து சமூக வலை​தளங்​களில் விடயங்களை வெளிப்படுத்திய, பிரபல யூடியூபர் மாரி​தாஸை சென்னை சைபர் க்ரைம் போலீ​ஸார் மதுரை​யில் கைது செய்​தனர்.

பிரபல யூ டியூப்​பர் மாரி​தாஸ். இவர், அவ்​வப்​போது அரசி​யல் தொடர்​பான கருத்​து​களை பதி​விடு​வதை வழக்​க​மாக கொண்​டுள்​ளார். கடந்த திமுக ஆட்​சி​யில் அரசுக்கு எதி​ராக சில பதிவு​களை வெளி​யிட்​டது தொடர்​பாக போலீ​ஸார் அவரை கைது செய்​தனர். தற்​போது, தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு விஜய் தலை​மையி​லான அரசு நடை​பெற்று வரு​கிறது.

இந்​நிலை​யில், அரசு மற்​றும் அமைச்​சர்​களின் செயல்​கள் குறித்து விமர்​சித்து வீடியோ வெளி​யிட்​டார். சமீபத்​தில் கூடதனது யூடியூப்​பக்​கத்​தில் தமிழக தொழில்​துறை அமைச்​சர் கீர்த்​தனா குறித்து விமர்​சித்​தார். அமைச்சர் கீர்த்தனா இளைஞன் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் நிலையில், அந்த இளைஞன் எந்த அரச பதவியிலும் இல்லாமல், அமைச்சில் செல்வாக்கு செலுத்தும் அதிர்ச்சி சம்பவத்தை அம்பலமாக்க, இது சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்தி உரு​வாக்​கப்​பட்ட புகைப்​படம் ஒன்றை வெளி​யிட்​டு, அமைச்​சரின் நற்​பெயருக்​குக் களங்​கம் விளைவிக்​கும் வகை​யில் மட்​டும் அல்​லாமல் இழி​வாக​வும், ஆபாச​மாக​வும் கருத்து பதி​விட்​ட​தாக மாரி​தாஸ் மீது சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது.

இதுகுறித்து உரிய விசா​ரணை நடத்த காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​விட்​டார். இதையடுத்​து, சென்னை மத்​திய குற்​றப்​பிரி​வில் உள்ள சைபர் க்ரைம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். இதற்​கிடை​யில் மதுரை கடச்​சனேந்​தல் பகு​தி​யிலுள்ள அவரது சகோ​தரர் வீட்​டில் மாரி​தாஸ் தங்கி இருப்​பது தெரிந்​தது. இதைத்​தொடர்ந்து காவல் உதவி ஆணை​யர் வெற்​றிவேந்​தன் தலை​மை​யில் 10-க்​கும்மேற்​பட்ட போலீ​ஸார் நேற்று காலை மதுரை சென்​றனர். பின்​னர் உள்​ளூர் போலீ​ஸார் உதவி​யுடன் மாரி​தாஸை கைது செய்து சென்னை அழைத்து வந்​தனர். தொடர்ந்து அவரை சிறை​யில் அடைப்​ப​தற்​கான நடவடிக்கை எடுக்கப்பட்​டது.

மாரி​தாஸ் கைதுக்கு பல்​வேறு தரப்​பிலிருந்து கண்​டனம் எழுந்​துள்​ளது.

அதி​முக எக்ஸ் பதிவு: மாரி​தாஸை விசா​ரிக்க வேண்​டும் என்​றால் நோட்​டீஸ் கொடுத்து அழைத்​திருக்​கலாமே, எதற்கு கைது செய்ய துடிக்​கிறீர்​கள், ஜனநாயகக் குரலை நெறிக்க முயலும் பொய்க்​கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்​டனத்​துக்​குரியது.

அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன்: கருத்​துச் சுதந்​திரத்தை நசுக்​கும் செயலை இத்​துடன் நிறுத்​தி​விட்​டு, விமர்​சனங்​களை எதிர்​கொண்டு ஆக்​கப்​பூர்​வ​மான செயல்​பாடு​களை முதல்​வர் முன்​னெடுக்க வேண்​டும்​.

பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை: ஆட்​சி​யில் குறை​பாடு​கள் இருப்​ப​தாக தகுந்த தரவு​களு​டன் கூறி, அதனை திருத்​திக் கொள்ள வேண்​டும் என்​று​தான் மாரிதாஸ் குறிப்​பிட்​டார். அதற்​காக அவர் கைது செய்​யப்​படு​வது கண்​டிக்​கத்​தக்​கது.

நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: மாரி​தாஸின் கருத்​துகள் அவதூறானவை எனக் கருதி​னால் சட்​டப்​படி​யாக வழக்​குத்தொடுக்​கலாம். மாறாக, கைது என்​பது ஜனநாயக விரோத​ம். முந்​தைய திமுக அரசு செய்த கருத்​துரிமை​யின் கழுத்தை நெரிக்​கும் அதே செயலை தவெக அரசும் தொடர்​வதற்கு பெயர்தான் தூய சக்​தி​யா?

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை குழப்ப முயலும் ராஜபக்ஷ ஆதரவு அரசியல்வாதிகள்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணைகளில், ஒரு...

பெரும் தொகை கள்ள டொலருடன் சிக்கிய பெண்

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம், நாட்டில் கள்ள டொலர் நோட்டுகளை விநியோகிக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்